புதிய வரவுகள் »

புதன், 9 மே, 2012

ஓ! மனிதர்களே!


ஓ! மனிதர்களே!
இது நீர்நடுவே அமைந்த
தேசம் என்பதாலா
எங்கள் கண்களிலெல்லாம்
நீர்கோர்க்கச் செய்கிறீர்

அறம்பற்றிப் பாடுவதும்
அறம் பாடுவதும்
தமிழனுக்கே உரியது
என்பதாலா
இன்று
அறம்பற்றிப் பேசவும்
அஞ்சுகிறீர்

உரிமைக்குப் போராடும்
எங்களின் உயிர்களை
உணவாக்கிக் கொள்ளும்
ஓநாய்களுக்கு உதவுவதையா
உயர்வெனக் கருதுகிறீர்

அகிம்சை ஆயுதம் கொடுக்க
காவிகள் இங்கே
களமாடுகின்றன

வெள்ளையரிடம் எடுபட்ட அகிம்சை
கொள்ளையரிடம்
கோமாலித்தனமாகிப் போனதே
எதார்த்த உண்மை

ஓ! மனிதர்களே!
நாங்கள் அன்பாய்த்தான் கேட்டோம்
ஓங்கி அடித்தே
இல்லை என்றன
ஓநாய்கள்

எங்கள் கைகளை
ஓங்கச்செய்யும் வேலையை
அந்த ஓநாய்களே
ஓய்வின்றிச் செய்தன

நாங்கள் தட்டிக்கேட்டே
பழக்கப் பட்டவர்கள்
முன்பு அவர்கள் இதயங்களையும்
பின்பு அவர்கள் முதுகுகளையும்

தமிழன்
அயலாரிடம்
அயலாரின் தாய்மொழியிலேயே
பேசிப் பழக்கப்பட்டவன்
அதனால்தான்
சிங்களர்களுக்குத் தெரிந்த
ஆயுத மொழியிலேயே
அவர்களோடு பேசிக்கொண்டிருக்கிறோம்

நாங்கள் எங்களுக்குள்
ஒற்றுமையாய்
இருக்கக் கருதியதைவிட
அவர்களோடு ஒற்றுமையாய்
வாழக் கருதியதே அதிகம்

தோசைகூட
இரண்டு பக்கம்தான்
சுடு படுகிறது
நாங்கள் எல்லா பக்கமும்
எல்லா பக்கத்திலிருந்தும்
சுடப்படுகிறோம்

இனிமேல் நாங்கள்
எங்கள் பெண்களை
வர்ணிக்கும்போது கூட
மயிலே என்று
வர்ணிக்கப் போவதில்லை

கற்புமுதல் கண்ணீர்வரை
சேய்முதல் செங்குருதிவரை
தாய்முதல் தாய்மண்வரை
எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்
இனி இழப்பதற்கு எங்களிடம்
ஏதுமில்லை
நீங்கள் எதையாவது கொடுத்து
இழக்கச் செய்தால்தான் உண்டு!

ஞாயிறு, 6 மே, 2012

புலிகள் ஓய்வதில்லை




நம்ம
ஈழ நிலத்தினிலே புலிகள் களத்தினிலே
இன்னுமுண்டு புலி ஓய்வதில்ல -அந்த
சிங்களர்க்கு அச்சம் உள்ளுக்குள்ள –பிர
பாகரன்உயி ரோடுஉள்ளானே –அந்தப்
பாயும் புலி ஈழம்வெல்வானே

    போரில் போராளி தினம்சாகலாம்
    போராட் டம்என்றும் சாகாதது
    த்ரோகம் எதிரிக்குத் துணைபோகலாம்
    துணிவே புலிகட்குத் துணையானது
    அண்ணனின் வழிநடத்தால் ஈழம் உறுதியடா
    அடையும் விடுதலைக்கு அர்ப்பணம் குருதியடா!
    வாழவைப்பான் நாளையந்த
    மாமறவன் தாள்பணிவோமே

ஈழ நிலத்தினிலே புலிகள் களத்தினிலே
இன்னுமுண்டு புலி ஓய்வதில்ல -அந்த
சிங்களர்க்கு அச்சம் உள்ளுக்குள்ள

    வீரன் மாவீரன் பிரபாகரன்
    வீணர் நமையாள விரும்பாதவன்
    தாகம் தமிழீழம் தானென்றவன்
    தாயாய் உருமாறித் துணைநின்றவன்
    எதிரியின் ஆயுதத்தால் எதிரியைத் தோற்கடித்தான்
    புலிஇவன் போலஎவன் புரட்சிக்குத் தோள்கொடுத்தான்
    வீட்டுக்கொரு ஆள்வருவீர்
    வென்றெடுப்பேன் ஈழம்என்றானே

ஈழ நிலத்தினிலே புலிகள் களத்தினிலே
இன்னுமுண்டு புலி ஓய்வதில்ல -அந்த
சிங்களர்க்கு அச்சம் உள்ளுக்குள்ள –பிர
பாகரன்உயி ரோடுஉள்ளானே –அந்தப்
பாயும் புலி ஈழம்வெல்வானே



செவ்வாய், 27 மார்ச், 2012

புலிவலம்! 32



மனித உரிமைமீரல்
நிகழ்த்தப்பட்டிருக்கிறது
மனிதர் அல்லாதவர்களால்

ஞாயிறு, 11 மார்ச், 2012

வீசுவதோ நற்செய்கை வீண்!

கல்நன்றாய்க் கற்றுக் கருத்தாய் மடமைதனைக்
கல்நன்றாய் என்றால் கருதாமல் -கல்லென்ற
ஆசிரியர் மூச்சறுக்க அந்தோ கொலைவாளை
வீசுவதோ நற்செய்கை? வீண்!

திங்கள், 13 பிப்ரவரி, 2012

புலிவலம்! 31



காசினியெங்கும்
காதிலிகளாய்ப் போனதால்
ஈழமெங்கும்
ஏதிலிகளாய்ப் போனோம்

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

புலிவலம்! 30



இனியெந்தத்
தமிழ் மங்கையின்
தளிர் வயிற்றிலும்
மழலைகள் பிறக்கவேண்டாம்
காடையருக்கான
மரணங்கள் பிறக்கட்டும்

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

புலிவலம்! 29



இனப்படுகொலை என்று
இப்பொழுது இயம்புகின்றார்கள்
இனப்படுகொலை நிகழ்ந்தபோது
இனம்கண்டு கொள்ளாத
மனப்படுகொலையாளர்கள்

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

புலிவலம்! 28



பேடிகை ஓல்வாள்தானே
இந்திய அரசும்
அதிகாரமும்

வியாழன், 2 பிப்ரவரி, 2012

புலிவலம்! 27



எப்படியெல்லாம் கொலைசெய்யலாம்
என்பதை வேண்டுமானால்
இட்லிரின்
பாசிசப் படையிடம்
பயின்றுகொள்ளலாம்

எப்படியெல்லாம் கற்பழிக்கலாம்
என்பதை
காடைய காட்டுமிராண்டிகளிடமே
கற்கமுடியும்

திங்கள், 30 ஜனவரி, 2012

புலிவலம்! 26



பிணங்களே
பதுங்கிக்கொள்ளுங்கள்
குண்டுதுளைத்த உடல்களையும்
கண்டுதுளைக்க வருகின்றன
சிங்கள ஆணுறுப்புக்கள்
பிணங்களே
பதுங்கிக்கொள்ளுங்கள்

வெள்ளி, 27 ஜனவரி, 2012

புலிவலம்! 25



அகிம்சை சாமி
ஆயுத சாமி என
ஆயிரம் சாமி இருந்துமென்ன
மொத்த சாமியும்
புத்தசாமிக்குப் பயந்து
மௌன சாமிகளாகிவிட்டனவே

செவ்வாய், 24 ஜனவரி, 2012

புலிவலம்! 24



ஐம்புலன்கள் வேண்டாம்
யாக்கையில் வலிவும் வேண்டாம்
ஆண்குறி ஒன்றுபோதும்
சிங்களராம் எங்களின்
சேனையில் சேர

புலியைக் கண்டால்
புறங்காட்டு
கிளியைக் கண்டால்
கற்பழி
இதுவே சேனையின்
சீர்மிகு மந்திரம்

சனி, 14 ஜனவரி, 2012

எழுச்சி வணக்க மாலையும் கரிகாலன் ஈற்றெடுப்பு நூல் வெளியீடும்!


மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட இம்மாததில் வீரகாவியமான மாவீரர்களது நினைவுவணக்க மாலையும், "கரிகாலன் ஈற்றெடுப்பு" நூல் வெளியீடும்.


மூத்த தளபதியும் வரலாற்று நாயகனுமான கேணல் கிட்டு உட்பட இம்மாததில் வீரகாவியமான அனைத்து மாவீரர்களையும் நினைவுகொள்ளும் நினைவுவணக்க மாலை லண்டனில் நடைபெறவுள்ளது.

22.01.2012 ஞாயிர்றுக்கிழமை மாலை 5:30 மணி முதல் மாலை 9:30 மணிவரை Eastham, Barking, London, E6 2RP எனும் முகவரியில் அமைந்துள்ள Eastham TOWN HALL மண்டபத்தில் நடைபெறவுள்ள  இந்த நிகழ்வில் "கரிகாலன் ஈற்றெடுப்பு" எனும் தேசியத் தலைவர் தொடர்பான கவிதை நூலும், மேலும் மூன்று ஒலிப் பேழைகளும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. 

இந்த நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ்மக்களை கலந்துகொண்டு மண்னுள்ளும், எம் மனங்களினுள்ளும் வித்தாகி வாழும் மாவீரர்களுக்கு தமது மலர் வணக்கதினை செலுத்துமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

இம் மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களது உறவினர்கள், மற்றும் உரித்துடையோர் ஐக்கிய இராட்சியத்தில் வசிப்பவர்களாக இருந்தால் 0208 733 8203 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது info@tnrf.co.uk எனும் மின்னஞ்சலூடாகவோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வெள்ளி, 13 ஜனவரி, 2012

தீரா விடம்! 4

அணுமின்னுக்கு எதிராக
ஆதரவு கூடுங்குளம்
கூடங்குளம்

செவ்வாய், 10 ஜனவரி, 2012

தீரா விடம்! 3

மயக்கம் கொள்ளவைக்கிறது
ரம் மட்டுமல்ல
ஸ்பெக்ட்ரமும்

சனி, 7 ஜனவரி, 2012

தீரா விடம்! 2



நிறைய நீரிருந்தும்
கொஞ்சமும் ஈரமில்லை
கர்நாடகாவிற்கு

செவ்வாய், 3 ஜனவரி, 2012

தீரா விடம்! 1

சென்ற நூற்றாண்டில்
தமிழினம்
தற்கொலை செய்துகொள்ள
மொண்டு மொண்டு
மாந்தியும்
தீரா விடம்
திராவிடம்

வெள்ளி, 30 டிசம்பர், 2011

புலிவலம்! 23



எங்களுக்கு
விரைப்பெடுத்தால்
தாயும் ஒன்றுதான்
நாயும் ஒன்றுதான்

விடுவோமா
தமிழச்சி கிடைத்தால்

புதன், 28 டிசம்பர், 2011

புலிவலம்! 22



பண் தாசன்
பாராளலாம்
ஆளக்கூடாதவன்
பெண் தாசனான
முண்டாசன்

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

புலிவலம்! 21



பதுங்க இடம்தேடிப்
பயந்தோடுகின்றன
பதுங்குக்குழிகள்

வியாழன், 22 டிசம்பர், 2011

புலிவலம்! 20



இப்பொழுது
வருத்தப்படுகிறேன்
இவர்களுக்காக அழ
இராவணன்போல்
எனக்கு
இருபது கண்கள்
இல்லையே என்று

திங்கள், 19 டிசம்பர், 2011

புலிவலம்! 19



விந்துநிரப்பிய
சிங்களத் துப்பாக்கிகள்
துளைத்துச் செல்கின்றன
பிணங்களின்
பிறப்புறுப்புக்களை

வியாழன், 15 டிசம்பர், 2011

புலிவலம்! 18



இங்கே
விலங்குகள் வாழவேண்டிக்
கொல்லுகிறார்கள்
மனிதர்களை

திங்கள், 12 டிசம்பர், 2011

புலிவலம்! 17



எதிரிகளே
இல்லா இனம்
தமிழினம்

எதிரே வந்த
எல்லோராலும்
அழிக்கப்பட்ட இனமும்
அதுதானே

வெள்ளி, 9 டிசம்பர், 2011

புலிவலம்! 16



4 சேனல்களால் ஒளிபரப்ப முடியாததை
ஒளிபரப்பிக் காட்டியது
சேனல் 4

செவ்வாய், 6 டிசம்பர், 2011

புலிவலம்! 15



அடே தமிழா!
உன்னைக் கொன்றால்
எவன் வருவான்
உன்னைத் தவிர

என்மேல்
கைவைத்துப்பார்
இந்தியா முதல்
இந்த
உலகமே வரும்

சனி, 3 டிசம்பர், 2011

புலிவலம்! 14


இனம்கொன்ற எவனுக்கும் உண்டு
இந்தியநாட்டில்
சிவப்புக்கம்பல வரவேற்பு

புதன், 30 நவம்பர், 2011

புலிவலம்! 13



உயிரற்ற மனுஷிகளைக்
கற்பழிக்கின்றன
உயிருள்ள பிணங்கள்

ஞாயிறு, 27 நவம்பர், 2011

புலிவலம்! 12


இவர்கள் ஏன்
பெரிதுபடுத்தப் போகிறார்கள்
சேய் தேசத்தின் அழிவை
தாய்தேசமே கண்டுகொள்ளாதபோது

சனி, 19 நவம்பர், 2011

புலிவலம்! 11


இந்தியா அணிந்த
செருப்போ கச்சத்தீவு?
கழற்றிவிடப்பட்டு விட்டதே

வியாழன், 17 நவம்பர், 2011

புலிவலம்! 10


ஒருபுறம்
புலிகளுக்குச்
சரணாலயம்
சமைத்துக் கொடுத்த
அதே தேசம்தான்
மறுபுறம்
புலிகளுக்கு
மரணாலயம்
அமைத்துக் கொடுத்தது

ஞாயிறு, 13 நவம்பர், 2011

புலிவலம்! 9


வாழத்தெரியாதவர்கள்
சாகடிக்கிறார்கள்
வாழ்ந்துகொண்டிருப்பவர்களை

வெள்ளி, 11 நவம்பர், 2011

புலிவலம்! 8



பதுங்கவரும் தமிழர்கண்டு
பயந்தோடுகின்றன
பதுங்குக்குழிகள்

புதன், 9 நவம்பர், 2011

புலிவலம்! 7


ஓர் இனத்தையே அழித்து
இருமாந்து நிற்கிறது
இரண்டகம்

திங்கள், 7 நவம்பர், 2011

புலிவலம்! 6


போர்க்குற்றவாளியாக
சிங்களவனை மட்டுமா
அறிவிக்க வேண்டும்
அறிவிக்கத்தான் வேண்டும்
சிங் கிளவனையும்

சனி, 5 நவம்பர், 2011

புலிவலம்! 5


ஆயுதம் அளித்ததோடு சரி
ஆட்களையெல்லாம் அனுப்பவில்லை
ஏனென்றால் நாங்கள்
அகிம்சைவாதிகள்

புலிவலம்! 4


அம்மணமாக்குங்கள் சிங்களர்களே
எங்களின் உடல்களையல்ல
உங்களின் மனங்களை

புதன், 2 நவம்பர், 2011

புலிவலம்! 3


சொல்லைக் காக்கச்சொன்னால்
பல்லைக் காக்கிறார்கள்
சிங்கள பிக்குகள்

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

புலிவலம்! 2





சுட்டுத் தள்ளுங்கள்
சுடப்படுவது தமிழன்தானே
விட்டுத் தள்ளுங்கள்
வீழ்ந்து மடிவது மனிதம்தானே

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

புலிவலம்! 1



தூக்கிலிடத்தான் வேண்டும்
தீர்ப்பெழுதிய கையையும்
தீர்ப்பெழுதச்சொன்ன நாவையும்

ஞாயிறு, 26 ஜூன், 2011

கொன்று குவிக்கவந்த கூற்று!



பாவடியால் நான்வாழ்த்த பத்தினி இல்லையிவள்
தேவடியாள் ஆதலினால் செப்புகிறேன் -தீவடிவாய்
வந்த இழுதையிவள் வண்டமிழர் கூட்டத்தைக்
கொன்று குவிக்கவந்த கூற்று!

இழுதை -பேய்

கொடிது!

ஈனவன் சிங்களன் இங்குக் கடலாடும்
மீனவன் உயிர்மாள வீழ்த்தினான்-மானமிலா
இந்திய மாப்படை ஈதுகண்டுங் காணாது
குந்தி இருத்தல் கொடிது!

திங்கள், 14 மார்ச், 2011

நூல் அறிமுகம்!






அமுதன் குறள் நூல் வெளியிடப்பட்டுள்ளது. நூலின் விலை 50 ரூபாய். வாங்க விரும்புவோர் கீழ்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளவும்.

அகரம் அமுதன்
அகரம் சீகூர் (அஞ்சல்)
குன்னம் (வட்டம்)
பெரம்பலூர் -621 108

பேச 9940723625

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

யார் ஆளவேண்டும்?




நல்லவன் தானடா வல்லவன் தானடா
நாட்டினை ஆளணும் சின்னப்பையா –அந்த
நல்லவன் வல்லவன் நாட்டினை ஆண்டிட
நாம உழைக்கணும் சின்னப்பையா!

கோட்டைக்குப் போனதும் கொள்ளை அடிப்பதைக்
கொள்கையாக் கொண்டோரைச் சின்னப்பையா –இந்த
நாட்டினை ஆண்டிட நாம விட்டதனால்
நாடு குட்டிச்சுவர் ஆனதையா!

மேடையில் பேசிடும் வக்கனைப் பேச்சுக்கள்
மெய்யென்று நம்பியே சின்னப்பையா –நாம
தேடித் தந்தவெற்றி திசைமாறிப் போனதால்
கோவணமும் களவு போனதையா!

வெட்டிச் சலுகைக்கு வாய்பிளந் தோடிநாம்
வெக்கங் கெட்டதனால் சின்னப்பையா –நாட்டை
வெட்டிக் கூறுபோட்டு விற்றிடுங் கும்பலைத்
தட்டிக் கேட்கும்உரம் இல்லையையா!

இன்னும் இவர்களை ஏற்றியும் போற்றியும்
இருப்பது மடமை ஆகுமையா –அந்தச்
சின்ன மதிகொண்ட தீயரை ஓட்டிட
சிந்தித் தொன்றுபட வேண்டுமையா!

சனி, 12 பிப்ரவரி, 2011

அன்றாடம் ஏறுதுங்க விலைவாசி!




அன்றாடம் ஏறுதுங்க விலைவாசி –அது
நின்றால்தான் வாழ்க்கையுண்டு அதையோசி
வறுமை மக்களை சூழ்ந்தாச்சு –இன்னும்
பொறுமை ஏனுங்க அண்ணாச்சி
(அன்றாடம்)
காடு உழுதவன் கஞ்சிக்கு அலைகிறான்
காய்கறி விலைபல மடங்காச்சு
நாடிருக்கும் நிலையில நல்லசோறு தின்பதற்கு
நாதியற்று நிற்கிறான் அன்றாடங்காட்சி –அதை
மாற்றி அமைத்திட நீயோசி
(அன்றாடம்)
அரசுப் பதவியில் அமர்ந்த வனுக்கோ
அன்றாடம் ஊதியம் எகிறுதுங்க
ஆளும் வர்க்கத்தின் அடுப்பைப்போல் ஏழைகளில்
அடிவயி றிங்கே எரியுதுங்க–இந்த
அவலத்தைப் போக்க அறிஞ்சிடுங்க!
(அன்றாடம்)
குறுக்கும் நெடுக்கும் உளறி நடக்கும்
குடிகா ரர்களின் கூடாரம்
குட்டிச்சுவர் ஆகிவிட்ட நாட்டினைச் சீர்படுத்த
கொள்கைவழி நடக்கல இங்குயாரும் –நாட்டைக்
கூறு போடுதுங்க அரிதாரம்!
(அன்றாடம்)
கையில காசுமில்ல வாயில தோசையில்ல
காஞ்சிக் கருகுவது ஏழைகளே
வெளிநாட்டு வங்கிகளில் கோடிகோடி யாப்பணத்தை
வச்சிருக்கும் அரசியல் வாதிகளாலே –வறுமை
வந்ததுங்க நாட்டிலே அதனாலே…
(அன்றாடம்)