புதிய வரவுகள் »

திங்கள், 13 பிப்ரவரி, 2012

புலிவலம்! 31காசினியெங்கும்
காதிலிகளாய்ப் போனதால்
ஈழமெங்கும்
ஏதிலிகளாய்ப் போனோம்

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

புலிவலம்! 30இனியெந்தத்
தமிழ் மங்கையின்
தளிர் வயிற்றிலும்
மழலைகள் பிறக்கவேண்டாம்
காடையருக்கான
மரணங்கள் பிறக்கட்டும்

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

புலிவலம்! 29இனப்படுகொலை என்று
இப்பொழுது இயம்புகின்றார்கள்
இனப்படுகொலை நிகழ்ந்தபோது
இனம்கண்டு கொள்ளாத
மனப்படுகொலையாளர்கள்

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

புலிவலம்! 28பேடிகை ஓல்வாள்தானே
இந்திய அரசும்
அதிகாரமும்

வியாழன், 2 பிப்ரவரி, 2012

புலிவலம்! 27எப்படியெல்லாம் கொலைசெய்யலாம்
என்பதை வேண்டுமானால்
இட்லிரின்
பாசிசப் படையிடம்
பயின்றுகொள்ளலாம்

எப்படியெல்லாம் கற்பழிக்கலாம்
என்பதை
காடைய காட்டுமிராண்டிகளிடமே
கற்கமுடியும்