புதிய வரவுகள் »
திங்கள், 13 பிப்ரவரி, 2012
வெள்ளி, 10 பிப்ரவரி, 2012
புலிவலம்! 30
இனியெந்தத்
தமிழ் மங்கையின்
தளிர் வயிற்றிலும்
மழலைகள் பிறக்கவேண்டாம்
காடையருக்கான
மரணங்கள் பிறக்கட்டும்
செவ்வாய், 7 பிப்ரவரி, 2012
புலிவலம்! 29
இனப்படுகொலை என்று
இப்பொழுது இயம்புகின்றார்கள்
இனப்படுகொலை நிகழ்ந்தபோது
இனம்கண்டு கொள்ளாத
மனப்படுகொலையாளர்கள்
ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012
வியாழன், 2 பிப்ரவரி, 2012
புலிவலம்! 27
எப்படியெல்லாம் கொலைசெய்யலாம்
என்பதை வேண்டுமானால்
இட்லிரின்
பாசிசப் படையிடம்
பயின்றுகொள்ளலாம்
எப்படியெல்லாம் கற்பழிக்கலாம்
என்பதை
காடைய காட்டுமிராண்டிகளிடமே
கற்கமுடியும்
திங்கள், 30 ஜனவரி, 2012
புலிவலம்! 26
பிணங்களே
பதுங்கிக்கொள்ளுங்கள்
குண்டுதுளைத்த உடல்களையும்
கண்டுதுளைக்க வருகின்றன
சிங்கள ஆணுறுப்புக்கள்
பிணங்களே
பதுங்கிக்கொள்ளுங்கள்
வெள்ளி, 27 ஜனவரி, 2012
புலிவலம்! 25
அகிம்சை சாமி
ஆயுத சாமி என
ஆயிரம் சாமி இருந்துமென்ன
மொத்த சாமியும்
புத்தசாமிக்குப் பயந்து
மௌன சாமிகளாகிவிட்டனவே
செவ்வாய், 24 ஜனவரி, 2012
புலிவலம்! 24
ஐம்புலன்கள் வேண்டாம்
யாக்கையில் வலிவும் வேண்டாம்
ஆண்குறி ஒன்றுபோதும்
சிங்களராம் எங்களின்
சேனையில் சேர
புலியைக் கண்டால்
புறங்காட்டு
கிளியைக் கண்டால்
கற்பழி
இதுவே சேனையின்
சீர்மிகு மந்திரம்
சனி, 14 ஜனவரி, 2012
எழுச்சி வணக்க மாலையும் கரிகாலன் ஈற்றெடுப்பு நூல் வெளியீடும்!
மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட இம்மாததில் வீரகாவியமான மாவீரர்களது நினைவுவணக்க மாலையும், "கரிகாலன் ஈற்றெடுப்பு" நூல் வெளியீடும்.
மூத்த தளபதியும் வரலாற்று
நாயகனுமான கேணல் கிட்டு உட்பட இம்மாததில் வீரகாவியமான அனைத்து
மாவீரர்களையும் நினைவுகொள்ளும் நினைவுவணக்க மாலை லண்டனில் நடைபெறவுள்ளது.
22.01.2012 ஞாயிர்றுக்கிழமை மாலை 5:30 மணி முதல் மாலை 9:30 மணிவரை Eastham, Barking, London, E6 2RP எனும் முகவரியில் அமைந்துள்ள Eastham TOWN HALL மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் "கரிகாலன் ஈற்றெடுப்பு" எனும் தேசியத் தலைவர் தொடர்பான கவிதை நூலும், மேலும் மூன்று ஒலிப் பேழைகளும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ்மக்களை கலந்துகொண்டு
மண்னுள்ளும், எம் மனங்களினுள்ளும் வித்தாகி வாழும் மாவீரர்களுக்கு தமது
மலர் வணக்கதினை செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இம்
மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களது உறவினர்கள், மற்றும்
உரித்துடையோர் ஐக்கிய இராட்சியத்தில் வசிப்பவர்களாக இருந்தால் 0208 733
8203 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது info@tnrf.co.uk எனும் மின்னஞ்சலூடாகவோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரம்
6:12 pm
வெள்ளி, 13 ஜனவரி, 2012
தீரா விடம்! 4
அணுமின்னுக்கு எதிராக
ஆதரவு கூடுங்குளம்
கூடங்குளம்
ஆதரவு கூடுங்குளம்
கூடங்குளம்
நேரம்
10:09 pm
லேபிள்கள்:
தீரா விடம்
செவ்வாய், 10 ஜனவரி, 2012
தீரா விடம்! 3
மயக்கம் கொள்ளவைக்கிறது
ரம் மட்டுமல்ல
ஸ்பெக்ட்ரமும்
ரம் மட்டுமல்ல
ஸ்பெக்ட்ரமும்
நேரம்
10:06 pm
லேபிள்கள்:
தீரா விடம்
சனி, 7 ஜனவரி, 2012
செவ்வாய், 3 ஜனவரி, 2012
தீரா விடம்! 1
சென்ற நூற்றாண்டில்
தமிழினம்
தற்கொலை செய்துகொள்ள
மொண்டு மொண்டு
மாந்தியும்
தீரா விடம்
திராவிடம்
தமிழினம்
தற்கொலை செய்துகொள்ள
மொண்டு மொண்டு
மாந்தியும்
தீரா விடம்
திராவிடம்
நேரம்
9:56 pm
லேபிள்கள்:
தீரா விடம்
வெள்ளி, 30 டிசம்பர், 2011
புதன், 28 டிசம்பர், 2011
ஞாயிறு, 25 டிசம்பர், 2011
வியாழன், 22 டிசம்பர், 2011
திங்கள், 19 டிசம்பர், 2011
வியாழன், 15 டிசம்பர், 2011
திங்கள், 12 டிசம்பர், 2011
வெள்ளி, 9 டிசம்பர், 2011
செவ்வாய், 6 டிசம்பர், 2011
புலிவலம்! 15
அடே தமிழா!
உன்னைக் கொன்றால்
எவன் வருவான்
உன்னைத் தவிர
என்மேல்
கைவைத்துப்பார்
இந்தியா முதல்
இந்த
உலகமே வரும்
சனி, 3 டிசம்பர், 2011
புதன், 30 நவம்பர், 2011
ஞாயிறு, 27 நவம்பர், 2011
சனி, 19 நவம்பர், 2011
வியாழன், 17 நவம்பர், 2011
புலிவலம்! 10
ஒருபுறம்
புலிகளுக்குச்
சரணாலயம்
சமைத்துக் கொடுத்த
அதே தேசம்தான்
மறுபுறம்
புலிகளுக்கு
மரணாலயம்
அமைத்துக் கொடுத்தது
ஞாயிறு, 13 நவம்பர், 2011
வெள்ளி, 11 நவம்பர், 2011
புதன், 9 நவம்பர், 2011
திங்கள், 7 நவம்பர், 2011
சனி, 5 நவம்பர், 2011
புதன், 2 நவம்பர், 2011
ஞாயிறு, 30 அக்டோபர், 2011
செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011
ஞாயிறு, 26 ஜூன், 2011
கொன்று குவிக்கவந்த கூற்று!
பாவடியால் நான்வாழ்த்த பத்தினி இல்லையிவள்
தேவடியாள் ஆதலினால் செப்புகிறேன் -தீவடிவாய்
வந்த இழுதையிவள் வண்டமிழர் கூட்டத்தைக்
கொன்று குவிக்கவந்த கூற்று!
இழுதை -பேய்
கொடிது!
ஈனவன் சிங்களன் இங்குக் கடலாடும்
மீனவன் உயிர்மாள வீழ்த்தினான்-மானமிலா
இந்திய மாப்படை ஈதுகண்டுங் காணாது
குந்தி இருத்தல் கொடிது!
மீனவன் உயிர்மாள வீழ்த்தினான்-மானமிலா
இந்திய மாப்படை ஈதுகண்டுங் காணாது
குந்தி இருத்தல் கொடிது!
திங்கள், 14 மார்ச், 2011
நூல் அறிமுகம்!
அமுதன் குறள் நூல் வெளியிடப்பட்டுள்ளது. நூலின் விலை 50 ரூபாய். வாங்க விரும்புவோர் கீழ்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளவும்.
அகரம் அமுதன்
அகரம் சீகூர் (அஞ்சல்)
குன்னம் (வட்டம்)
பெரம்பலூர் -621 108
பேச 9940723625
நேரம்
11:52 am
லேபிள்கள்:
நூல் அறிமுகம்
செவ்வாய், 22 பிப்ரவரி, 2011
யார் ஆளவேண்டும்?
நல்லவன் தானடா வல்லவன் தானடா
நாட்டினை ஆளணும் சின்னப்பையா –அந்த
நல்லவன் வல்லவன் நாட்டினை ஆண்டிட
நாம உழைக்கணும் சின்னப்பையா!
கோட்டைக்குப் போனதும் கொள்ளை அடிப்பதைக்
கொள்கையாக் கொண்டோரைச் சின்னப்பையா –இந்த
நாட்டினை ஆண்டிட நாம விட்டதனால்
நாடு குட்டிச்சுவர் ஆனதையா!
மேடையில் பேசிடும் வக்கனைப் பேச்சுக்கள்
மெய்யென்று நம்பியே சின்னப்பையா –நாம
தேடித் தந்தவெற்றி திசைமாறிப் போனதால்
கோவணமும் களவு போனதையா!
வெட்டிச் சலுகைக்கு வாய்பிளந் தோடிநாம்
வெக்கங் கெட்டதனால் சின்னப்பையா –நாட்டை
வெட்டிக் கூறுபோட்டு விற்றிடுங் கும்பலைத்
தட்டிக் கேட்கும்உரம் இல்லையையா!
இன்னும் இவர்களை ஏற்றியும் போற்றியும்
இருப்பது மடமை ஆகுமையா –அந்தச்
சின்ன மதிகொண்ட தீயரை ஓட்டிட
சிந்தித் தொன்றுபட வேண்டுமையா!
நேரம்
1:21 pm
லேபிள்கள்:
இசைப்பாடல்
சனி, 12 பிப்ரவரி, 2011
அன்றாடம் ஏறுதுங்க விலைவாசி!
அன்றாடம் ஏறுதுங்க விலைவாசி –அது
நின்றால்தான் வாழ்க்கையுண்டு அதையோசி
வறுமை மக்களை சூழ்ந்தாச்சு –இன்னும்
பொறுமை ஏனுங்க அண்ணாச்சி
(அன்றாடம்)
காடு உழுதவன் கஞ்சிக்கு அலைகிறான்
காய்கறி விலைபல மடங்காச்சு
நாடிருக்கும் நிலையில நல்லசோறு தின்பதற்கு
நாதியற்று நிற்கிறான் அன்றாடங்காட்சி –அதை
மாற்றி அமைத்திட நீயோசி
(அன்றாடம்)
அரசுப் பதவியில் அமர்ந்த வனுக்கோ
அன்றாடம் ஊதியம் எகிறுதுங்க
ஆளும் வர்க்கத்தின் அடுப்புகள் ஏழைகளின்
அடிவயி றாட்டம் எரிகிறதுங்க –இந்த
அவலத்தைப் போக்க அறிஞ்சிடுங்க!
(அன்றாடம்)
குறுக்கும் நெடுக்கும் உளறி நடக்கும்
குடிகா ரர்களின் கூடாரம்
குட்டிச்சுவர் ஆகிவிட்ட நாட்டினைச் சீர்படுத்த
கொள்கைவழி நடக்கல இங்குயாரும் –நாட்டைக்
கூறு போடுதுங்க அரிதாரம்!
(அன்றாடம்)
கையில காசுமில்ல வாயில தோசையில்ல
காஞ்சிக் கருகுவது ஏழைகளே
வெளிநாட்டு வங்கிகளில் கோடிகோடி யாப்பணத்தை
வச்சிருக்கும் அரசியல் வாதிகளாலே –வறுமை
வந்ததுங்க நாட்டிலே அதனாலே…
(அன்றாடம்)
சனி, 11 செப்டம்பர், 2010
விடுதலைசெய்!

நாம்தமிழ ராய்வாழ்ந்தோம் நமைப்பிரித்துத் திரவிடராய்
நலியச் செய்து
தாம்சிறந்தார்; தமிழகத்தில் தமிழர்க்காய்த் தமிழ்க்கழகம்
தழைக்கா வன்னம்
வேம்பனையார் காத்திட்டார் விரைந்தந்நாள் கதிரவனார்
வழியில் சீமான்
நாம்தமிழர் கழகத்தை நனிதொடங்கி நடத்துவதால்
நடுக்குற் றாரே!
நானிலமும் திரவிடமே நடைபோட நத்தியவர்
நம்தம் சீமான்
தானியன்று நாம்தமிழர் தனிக்கழகம் தொடங்கியதால்
தலைக்குத் துற்றே
ஏனிவனும் நாம்தமிழர் எனும்பெயரில் ஓர்கழகம்
எழுப்பு கின்றான்
காணிவனை என்செய்தும் கழகமதை மூடிவிடல்
கடமை என்றார்!
ஊனமனம் மேலோங்க உளக்கரவு கொண்டவிந்த
உணர்வில் லாதார்
ஆனவரை துன்பந்தந் தருந்தலைவன் செயல்முடிக்க
ஆசை கொண்டு
மீனவர்கள் தம்துயரை மேடைதனிற் பேசியதை
மிகையென் றாங்கே
மானமிகு சீமானை மறுவுடையார் சிறைவைத்து
மகிழ்கின் றாரே!
விடுதலைசெய்! நாம்தமிழ வேங்கைதனை; இங்குள்ள
மீன வர்க்குக்
கெடுதலைச்செய் துளங்களிக்குங் கீழான காடையரைக்
கேள்வி கேட்கா
நெடுமரமே! திரவிடமே! நேர்நடுவண் அரசே!உன்
நேர்மை யில்லாக்
கொடியமனப் போக்காலே கொலையுண்டார் ஈழத்தார்
கொடுமை ஈதே!
தமிழ்ச்செருக்கன்
நேரம்
5:53 pm
லேபிள்கள்:
அறுசீர் மண்டிலம்
புதன், 23 ஜூன், 2010
கண்ணுறங்கு!

சீராரும் செந்தமிழைச் சீரழிக்க வந்தவனே!
பேராரும் தமிழினத்தைப் பேரிடரில் விட்டவனே!
நீரோடுந் தமிழ்நிலத்தில் நீர்வற்றச் செய்தவனே!
வாராதோ சாவுனக்கு? வரும்வரையில் கண்ணுறங்கு!
தன்குடியே நாடாளத் தக்கதெலாஞ் செய்பவனே!
தன்பெயரில் தொலைக்காட்சி தந்தவனே! மதுக்கடைகள்
பொன்குவிக்கும் இடமென்று போய்திறந்த பெண்ணவளைப்
பின்பற்றி இந்நாட்டைப் பிணக்காடாய்ச் செய்தவனே!
பேணாத ஒழுக்கத்தைப் பேணுவதாய்ப் பறைசாற்றும்
நாணாத நெஞ்சினனே! நாத்தழும்பு கொண்டோனே!
காணாத இனமாகக் கவின்தமிழர் போயொழிய
வீணான செயலையெல்லாம் விரிப்பவனே கண்ணுறங்கு!
தனையெதிர்க்கும் சான்றோரைத் தற்குறிகள் என்பவனே!
உனைநிகர்த்தோன் இல்லையென ஊரைவிட்டே உரைப்பவனே!
தினையளவும் திருந்தாத தீயவனே! மூப்படைந்த
நிணக்குன்றே! இறப்புனக்கு நேரு(ம்)வரை கண்ணுறங்கு!
நேரம்
10:22 am
லேபிள்கள்:
கலிமண்டிலம்
செவ்வாய், 22 ஜூன், 2010
அழிப்பது தமிழினை ஆம்!
பழுத்தசெந் தமிழதன் பயனுறு மெழுத்தினைக்
கொழுத்தகீழ் விலங்குகள் குறையெனத் திருத்துதல்
ஒழுக்கமில் செயலென ஓது!
கொழுத்தபின் வளைதனில் குடியிரா உயிரிபோல்
செழித்தசெந் தமிழினால் செழிப்பெலாம் அடைந்தபின்
அழிப்பது தமிழினை ஆம்!
கழுத்தினை அறுப்பதும் கடமையோ? தமிழினால்
கொழுத்தபின் தமிழ்க்கொலை புரிவதோ? பிழைத்தவும்
இழுத்துநா அறுத்திடல் மேல்!
தமிழ்ச்செருக்கன்!
நேரம்
1:13 pm
லேபிள்கள்:
வெண்டாழிசை
வியாழன், 27 மே, 2010
கற்பும், குஷ்பும்!
சொற்பொருத்திச் சோன்னாரே இளங்கோ அன்று
சோலைமகள் கண்ணகியைக் கருத்தில் கொண்டு
நெற்புறத்து முனையளவும் நெறிபி ழையாக்
கற்பதுவே கற்பென்று; இன்றோ இங்கு
கற்பென்றால் என்னவிலை? கேட்கு றாங்க!
கண்ணகியின் உடைமைண்ணும் பேசு றாங்க!
நற்றாலி ஏறும்முன் கலவ லாமாம்
நலங்கெடாம ‘காண்ட’மது காக்கு தாமாம்!
தமிழ்ச்செருக்கன்
நேரம்
10:07 pm
லேபிள்கள்:
எண்சீர் மண்டிலம்
புதன், 19 மே, 2010
எழுத்துச் சீர்திருத்தம் எனும் சீர்கேடு!

எழுத்துச் சீர்திருத் தம்மெனும் பேரிலே
எழுத்துச் சீர்கெடுத் தின்புறப் பார்க்கிறார்
பழுத்த தீந்தமிழ்ப் பற்றுலார் நாட்டிலே
கொழுத்த இத்தகைக் குக்கலை ஓட்டுவோம்!
பாரில் முன்பதாய்த் தோன்றிய தீந்தமிழ்
நேரொன் றில்லதாய் நின்றுசெ ழித்ததே!
வேரில் தீயினை வைத்ததைத் தீய்க்கவோ
சீரில் லாத்திருத் தஞ்செயப் பார்க்கிறார்?
தன்னை யேபெரும் தக்கறி வாளனாய்
எண்ணி இத்தகைத் தீச்செயல் செய்யிட
உண்ணிப் போந்தரோ? உள்ளுவப் புற்றரோ?
நண்ணி ஆங்கவர் நாவறு தல்நலம்!
காலம் ஆயிரம் தாண்டியே வாழ்கிற
ஞாலத் தாய்மொழி இத்தனை காலமும்
கோலம் மாசுறாக் கொள்கையாற் சீர்மிகுந்(து)
ஆளும் காட்சியை ஆங்கவர் காண்கவே!
சீனத் தில்பல ஆயிர மாயெழுத்(து)
ஆன பொதிலும் அம்மொழி கற்றிட
சீனர் அஞ்சிடார் தீந்தமிழ் கற்றிட
ஏனச் சம்மிக எய்தினீர் செப்புவீர்!
எழுத்தை மாற்றினால் இன்தமிழ் வாழுமாம்
குழந்தை நாடியே கற்குமாம் நத்துமாம்
கிழட்டு நாய்களே நீருமந் நாட்களில்
குழந்தை இல்லையோ? கற்கலை யோதமிழ்?
எழுத்துச் சீர்திருத் தம்மெனும் கேட்டினைப்
பழித்து நீக்குவோம் பைந்தமிழ் வாழவே
அழுத்த மாயிதை ஆற்றுவோம் இங்கவர்
இழுத்த பாதையில் செல்லமா டில்லைநாம்!
தமிழ்ச்செருக்கன்
நேரம்
7:25 pm
லேபிள்கள்:
கலிமண்டிலம்
வியாழன், 11 மார்ச், 2010
காவியும் காமமும்!
நடிகை ரஞ்சிதாவுடனான தொடர்பால் தலைமறைவாக வாழும் நித்தியானந்தா பாடுவதாக அமைந்த பா!
காவியும் காமமும் இரண்டென்பர் அறிவிலார்
காவியே காமமாவ தாரும் அறிகிலார்
காவியே காமமாவ தாரும் அறிந்தபின்
காவியே காமமாய் அமர்ந்திருந் தாரே!
தமிழ்ச்செருக்கன்
நேரம்
8:13 pm
புதன், 5 ஆகஸ்ட், 2009
தேர்தல்!

தேர்தலிலாக் கீழ்மதியன் தேர்ந்தான் என்றே
தேர்ந்துரைத்தார்!* தேர்ந்தறியத் தெரியா மக்கள்
தேர்தலிலாத் தேர்தலிலே தோற்றோன் தேர்தல்
தேர்ந்தெடுத்த பொய்யென்று தேர்ந்த றிந்தும்
தேர்தலிலா நெஞ்சினராய்த் தேர்ந்து நின்றார்;
தேர்தலிலான் தேர்தற்காய்த் தேர்ந்த இந்தத்
தேர்தலிலா தீர்வுதனைத் தேடு கின்றீர்?
தேர்தலிலா இந்நாடுந் தேர்தல் என்றோ?
தமிழ்ச்செருக்கன்
நேரம்
9:06 pm
சனி, 24 ஜனவரி, 2009
இவனா தமிழன்!

ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்திய அரசு சும்மாயிருந்தால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகுவோம் - தமிழக முதல்வர்.
செய்தி -24/1/2009
மோடிவித்தைக் காரனடா முத்தமிழ் அறிஞன்! -இந்த
மூடமதிக் காரனா தமிழினத்தின் தலைவன்?
வேடிக்கை பார்ப்பதென்ன உயிர்போகும் வேளை? -உடன்
நாடிப்போய் அவிழ்ஆடை அள்ளாக்கை என்கை?
போதுமடா சாமியிந்த அரசியல்நா டகங்கள்! -இந்தப்
பொய்யுரைப் புல்லர்களால் பெற்றதென்ற மக்கள்?
ஏதுமில்லை என்றபின்னும் இவர்களையே நம்பி -இன்னும்
இளித்த வாயன் என்றபெயர் ஏனுனக்கு தம்பி?
மூடமதிக் காரனா தமிழினத்தின் தலைவன்?
வேடிக்கை பார்ப்பதென்ன உயிர்போகும் வேளை? -உடன்
நாடிப்போய் அவிழ்ஆடை அள்ளாக்கை என்கை?
போதுமடா சாமியிந்த அரசியல்நா டகங்கள்! -இந்தப்
பொய்யுரைப் புல்லர்களால் பெற்றதென்ற மக்கள்?
ஏதுமில்லை என்றபின்னும் இவர்களையே நம்பி -இன்னும்
இளித்த வாயன் என்றபெயர் ஏனுனக்கு தம்பி?
தமிழ்ச்செருக்கன்!
நேரம்
11:47 pm
சனி, 10 ஜனவரி, 2009
நேர்காணல்!
முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர், தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களுடன் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டிய சிறப்பு நேர்காணல்!
நேர் காண்பவர்:- தமிழ்ச்செருக்கன்!
ஆற்றுநீர் கேட்டால் அருந்த நொதிப்பழச்
சாற்றுநீர்* தந்தீர் தகையாமோ! -மாற்றுநீர்
முந்தைய ஆட்சியர் முன்வைத்தார் நாமதைப்
பின்பற்று கின்றோம் பெரிது!
மதுவின் கடையை அரசுடைமை ஆக்கும்
புதுமையும் என்ன புகல்வீர்! -மதுவைக்
குடிமகனாய் வாழ்தல் குலப்பெருமை நல்லக்
குடிமகனாய் வாழ்தல் குறை!
ஓடிக் கொடிபிடித்(து) ஒப்பில்செங் கோல்பிடித்துக்
கோடிகளைச் சேர்க்கும் கொடுமையென்ன? -கூடடைந்து
தேனெடுத்தோன் நத்திப் புறங்கையை நக்கானோ!
நானுமதைச் செய்தேன் நயந்து!
திட்டங்கள் யாவும் திருடுதற் கென்றறிந்தும்
சட்டங்கள் ஏனிங்கே சல்லடையாய்? -கொட்டமடித்(து)
ஓடி வெளியேற ஊழல் பெருச்சாலி
தேடி அமைத்த திவை!
"வரிவிலக்குச் செய்தால் வளர்தமிழும் வெள்ளித்
திரைவாழும்" என்றவர்யார் செப்பும்! -உரைக்குங்கால்
தாழுமென் றெண்ணித் தவிப்பதேன்? நன்றாய்நான்
வாழத் தமிழ்வாழும் வந்து!
தமிழ்வழிக் கல்விக்குத் தக்கவழி காணா(து)
அமிழ்வதேன் ஆங்கிலத்தை அண்டி? -நமக்கெதிரி
இந்தியன்றி ஆங்கிலம் இல்லையப்பா! ஆங்கிலத்தில்
சிந்திக்கின் சேரும் சிறப்பு!
நாய்மொழியும் தாய்மொழியில் நன்கமைய நற்றமிழர்
தாய்மொழியோ நாய்மொழிபோல் நாறிடுதே! -தாய்மொழியாய்
ஆங்கிலமும், வாய்மொழியாய் ஆரியமும் ஆகுங்கால்
நீங்கிவிடும் இந்த நிலை!
சன்டி.வி யார்டி.வி? என்டி.வி உன்டி.வி
என்றடித்துக் கொள்ளும் இழிவுமேன்? -பொன்முட்டை
போடுகிற வாத்தப்பா! போக விடலாமா?
கூடும் வரைகறத்தல் கோள்!
தொலைக்காட்சி தந்துமின் துண்டித்தீர் நீள்வான்
அலைக்காட்சி காண்பதென்(று) ஆங்கே? -உலைக்கரிசி
ஒற்றை உருவாய்க் குவந்தீய மக்களும்
மற்றதைப் போவார் மறந்து!
திரவிடம் பேசித் திரிகிறீர் அஃதால்
தரவு*ண்டோ சொல்வீர் தகைந்து!* -திரவிடம்
பேசியே நாட்டைப் பிடித்தோம் பொருள்பற்றும்
வேசியே போலும் விரைந்து!
கொள்ளுங்கால் மக்களைக் கோமாளி ஆக்குமக்
கொள்கை உமக்குமெனக் கொள்வதுண்டா? -கொள்கையெலாம்
தொண்டர்க்கே யன்றித் தொகுத்த தவைவனுக்கும்
உண்டென்பார் யாரே உரை!
தீட்டணி என்பீர் எதிரணிசேர்ந் தாரொடுபின்
கூட்டிணி வைத்தலுமோர் கொள்கையோ? -கூட்டணியே
கொள்கை எனவானால் கூட்டணிக்குள் கொள்கையுமேன்?
கொள்கை புதையின் குழி!
வாக்களித்த மக்களும் வாழ வகைகாணா(து)
ஏக்கமுறச் செய்தல் இசையாமோ? -வாக்கிற்கு
வாக்குக் கொடுத்தோமே வாய்மொழியாய்; வேறெதையும்
மேற்கொண்டு கேட்பதெல்லாம் வீண்!
இன்னுமா உம்மை இழவெடுத்தோர் நம்புகிறார்?
ஒன்னுமா* இந்த உணர்வலைகள்? -என்னபண்ண?
வண்ணத் தொலைக்காட்சி வக்கணையாய் வாய்ப்பேச்சு
நண்ணுவார்* இந்த நகைக்கு!
வேசிச் சிரிப்பாலே வேதனையைத் தூண்டாதீர்
யோசனையென் நாட்டின் உயர்வுக்கு? -யோசனையா?
சாதிக் கொருகட்சி வீதிக் கொருகட்சி
தேதிக் கொருகட்சி செய்!
புற்றீசல் போலப் புதுக்கட்சி கள்கண்டால்
உற்றிடுமோ இந்நா(டு) உயர்வனைத்தும்? -அற்றமறந்(து)
ஆங்குறு கட்சிகளின் ஆதரவில் நாடாள்வோம்
தீங்கிலை நாட்டிற்கு தேர்!
மத்தியில் நீர்சொன்னால் மாட்டேன்என் பாரோதான்?
நத்திப் புலி*க்காய் நவிலீரோ? -சித்தம்*
பரிசுவரும் என்றால் பணிப்பேன்*; பணிக்கேன்*
துரிசு*வரும் என்றால் துணிந்து!
ஈழம் தமிழர்க்கே என்றெடுத் தோதாமல்
மேழம்*போல் ஏன்வெறும்வாய் மெல்லுகிறீர்? -ஏயம்*
எனக்கருதி விள்ளா* திருந்திட்டேன் நீயும்
‘எனக்கென்ன?’ என்றே இரு!
ஐந்துமுறை ஆண்டும் அலுப்பிலையோ? நாடிதனை
ஐந்நூறும் ஆளும் அவாஉண்டோ? -பைந்நிறைந்தும்
நெஞ்சில் நிறைவில்லை நேரெனக்குப் பின்னென்றன்
சந்ததியும் நாடாளும் சார்ந்து!
நக்கல் நயப்பேச்சும் சிக்கல் செழும்பேச்சும்
மிக்குடையாய்! வாழும் மிடுக்*குரை! -மக்களாம்
மந்திகளால் வாழும் வகையுற்றேன் வேறென்ன?
தொந்திவளர்க் கின்றேன் தொடர்ந்து!
அருஞ்சொற் பொருள்:-
நொதிப்பழச் சாற்றுநீர் -பழங்களை நொதிக்கவைத்து உண்டாக்கும் பழக்கள்; கோல் -செங்கோல்; தரவு -இலாபம்; தகைந்து -துணிந்து; ஒன்னுதல் -பொருந்துதல்; நண்ணுதல் -பொருந்துதல்; புலி -விடுதலைப் புலிகள்; சித்தம் -திண்ணம்; பணித்தல் -ஆணையிடுதல்; பணிப்பேன் -ஆணையிடுவேன்; பணிக்கேன் -ஆணையிட மாட்டேன்; துரிசு -துன்பம்; மேழம் -ஆடு; ஏயம் -தள்ளத்தக்கது; விள்ளுதல் -சொல்லுதல்
தமிழ்ச்செருக்கன்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







































