புதிய வரவுகள் »

வெள்ளி, 30 டிசம்பர், 2011

புலிவலம்! 23எங்களுக்கு
விரைப்பெடுத்தால்
தாயும் ஒன்றுதான்
நாயும் ஒன்றுதான்

விடுவோமா
தமிழச்சி கிடைத்தால்

புதன், 28 டிசம்பர், 2011

புலிவலம்! 22பண் தாசன்
பாராளலாம்
ஆளக்கூடாதவன்
பெண் தாசனான
முண்டாசன்

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

புலிவலம்! 21பதுங்க இடம்தேடிப்
பயந்தோடுகின்றன
பதுங்குக்குழிகள்

வியாழன், 22 டிசம்பர், 2011

புலிவலம்! 20இப்பொழுது
வருத்தப்படுகிறேன்
இவர்களுக்காக அழ
இராவணன்போல்
எனக்கு
இருபது கண்கள்
இல்லையே என்று

திங்கள், 19 டிசம்பர், 2011

புலிவலம்! 19விந்துநிரப்பிய
சிங்களத் துப்பாக்கிகள்
துளைத்துச் செல்கின்றன
பிணங்களின்
பிறப்புறுப்புக்களை

வியாழன், 15 டிசம்பர், 2011

புலிவலம்! 18இங்கே
விலங்குகள் வாழவேண்டிக்
கொல்லுகிறார்கள்
மனிதர்களை

திங்கள், 12 டிசம்பர், 2011

புலிவலம்! 17எதிரிகளே
இல்லா இனம்
தமிழினம்

எதிரே வந்த
எல்லோராலும்
அழிக்கப்பட்ட இனமும்
அதுதானே

வெள்ளி, 9 டிசம்பர், 2011

புலிவலம்! 164 சேனல்களால் ஒளிபரப்ப முடியாததை
ஒளிபரப்பிக் காட்டியது
சேனல் 4

செவ்வாய், 6 டிசம்பர், 2011

புலிவலம்! 15அடே தமிழா!
உன்னைக் கொன்றால்
எவன் வருவான்
உன்னைத் தவிர

என்மேல்
கைவைத்துப்பார்
இந்தியா முதல்
இந்த
உலகமே வரும்

சனி, 3 டிசம்பர், 2011

புலிவலம்! 14


இனம்கொன்ற எவனுக்கும் உண்டு
இந்தியநாட்டில்
சிவப்புக்கம்பல வரவேற்பு

புதன், 30 நவம்பர், 2011

புலிவலம்! 13உயிரற்ற மனுஷிகளைக்
கற்பழிக்கின்றன
உயிருள்ள பிணங்கள்

ஞாயிறு, 27 நவம்பர், 2011

புலிவலம்! 12


இவர்கள் ஏன்
பெரிதுபடுத்தப் போகிறார்கள்
சேய் தேசத்தின் அழிவை
தாய்தேசமே கண்டுகொள்ளாதபோது

சனி, 19 நவம்பர், 2011

புலிவலம்! 11


இந்தியா அணிந்த
செருப்போ கச்சத்தீவு?
கழற்றிவிடப்பட்டு விட்டதே

வியாழன், 17 நவம்பர், 2011

புலிவலம்! 10


ஒருபுறம்
புலிகளுக்குச்
சரணாலயம்
சமைத்துக் கொடுத்த
அதே தேசம்தான்
மறுபுறம்
புலிகளுக்கு
மரணாலயம்
அமைத்துக் கொடுத்தது

ஞாயிறு, 13 நவம்பர், 2011

புலிவலம்! 9


வாழத்தெரியாதவர்கள்
சாகடிக்கிறார்கள்
வாழ்ந்துகொண்டிருப்பவர்களை

வெள்ளி, 11 நவம்பர், 2011

புலிவலம்! 8பதுங்கவரும் தமிழர்கண்டு
பயந்தோடுகின்றன
பதுங்குக்குழிகள்

புதன், 9 நவம்பர், 2011

புலிவலம்! 7


ஓர் இனத்தையே அழித்து
இருமாந்து நிற்கிறது
இரண்டகம்

திங்கள், 7 நவம்பர், 2011

புலிவலம்! 6


போர்க்குற்றவாளியாக
சிங்களவனை மட்டுமா
அறிவிக்க வேண்டும்
அறிவிக்கத்தான் வேண்டும்
சிங் கிளவனையும்

சனி, 5 நவம்பர், 2011

புலிவலம்! 5


ஆயுதம் அளித்ததோடு சரி
ஆட்களையெல்லாம் அனுப்பவில்லை
ஏனென்றால் நாங்கள்
அகிம்சைவாதிகள்

புலிவலம்! 4


அம்மணமாக்குங்கள் சிங்களர்களே
எங்களின் உடல்களையல்ல
உங்களின் மனங்களை

புதன், 2 நவம்பர், 2011

புலிவலம்! 3


சொல்லைக் காக்கச்சொன்னால்
பல்லைக் காக்கிறார்கள்
சிங்கள பிக்குகள்

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

புலிவலம்! 2

சுட்டுத் தள்ளுங்கள்
சுடப்படுவது தமிழன்தானே
விட்டுத் தள்ளுங்கள்
வீழ்ந்து மடிவது மனிதம்தானே

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

புலிவலம்! 1தூக்கிலிடத்தான் வேண்டும்
தீர்ப்பெழுதிய கையையும்
தீர்ப்பெழுதச்சொன்ன நாவையும்

ஞாயிறு, 26 ஜூன், 2011

கொன்று குவிக்கவந்த கூற்று!பாவடியால் நான்வாழ்த்த பத்தினி இல்லையிவள்
தேவடியாள் ஆதலினால் செப்புகிறேன் -தீவடிவாய்
வந்த இழுதையிவள் வண்டமிழர் கூட்டத்தைக்
கொன்று குவிக்கவந்த கூற்று!

இழுதை -பேய்

கொடிது!

ஈனவன் சிங்களன் இங்குக் கடலாடும்
மீனவன் உயிர்மாள வீழ்த்தினான்-மானமிலா
இந்திய மாப்படை ஈதுகண்டுங் காணாது
குந்தி இருத்தல் கொடிது!

திங்கள், 14 மார்ச், 2011

நூல் அறிமுகம்!


அமுதன் குறள் நூல் வெளியிடப்பட்டுள்ளது. நூலின் விலை 50 ரூபாய். வாங்க விரும்புவோர் கீழ்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளவும்.

அகரம் அமுதன்
அகரம் சீகூர் (அஞ்சல்)
குன்னம் (வட்டம்)
பெரம்பலூர் -621 108

பேச 9940723625

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

யார் ஆளவேண்டும்?
நல்லவன் தானடா வல்லவன் தானடா
நாட்டினை ஆளணும் சின்னப்பையா –அந்த
நல்லவன் வல்லவன் நாட்டினை ஆண்டிட
நாம உழைக்கணும் சின்னப்பையா!

கோட்டைக்குப் போனதும் கொள்ளை அடிப்பதைக்
கொள்கையாக் கொண்டோரைச் சின்னப்பையா –இந்த
நாட்டினை ஆண்டிட நாம விட்டதனால்
நாடு குட்டிச்சுவர் ஆனதையா!

மேடையில் பேசிடும் வக்கனைப் பேச்சுக்கள்
மெய்யென்று நம்பியே சின்னப்பையா –நாம
தேடித் தந்தவெற்றி திசைமாறிப் போனதால்
கோவணமும் களவு போனதையா!

வெட்டிச் சலுகைக்கு வாய்பிளந் தோடிநாம்
வெக்கங் கெட்டதனால் சின்னப்பையா –நாட்டை
வெட்டிக் கூறுபோட்டு விற்றிடுங் கும்பலைத்
தட்டிக் கேட்கும்உரம் இல்லையையா!

இன்னும் இவர்களை ஏற்றியும் போற்றியும்
இருப்பது மடமை ஆகுமையா –அந்தச்
சின்ன மதிகொண்ட தீயரை ஓட்டிட
சிந்தித் தொன்றுபட வேண்டுமையா!

சனி, 12 பிப்ரவரி, 2011

அன்றாடம் ஏறுதுங்க விலைவாசி!
அன்றாடம் ஏறுதுங்க விலைவாசி –அது
நின்றால்தான் வாழ்க்கையுண்டு அதையோசி
வறுமை மக்களை சூழ்ந்தாச்சு –இன்னும்
பொறுமை ஏனுங்க அண்ணாச்சி
(அன்றாடம்)
காடு உழுதவன் கஞ்சிக்கு அலைகிறான்
காய்கறி விலைபல மடங்காச்சு
நாடிருக்கும் நிலையில நல்லசோறு தின்பதற்கு
நாதியற்று நிற்கிறான் அன்றாடங்காட்சி –அதை
மாற்றி அமைத்திட நீயோசி
(அன்றாடம்)
அரசுப் பதவியில் அமர்ந்த வனுக்கோ
அன்றாடம் ஊதியம் எகிறுதுங்க
ஆளும் வர்க்கத்தின் அடுப்பைப்போல் ஏழைகளில்
அடிவயி றிங்கே எரியுதுங்க–இந்த
அவலத்தைப் போக்க அறிஞ்சிடுங்க!
(அன்றாடம்)
குறுக்கும் நெடுக்கும் உளறி நடக்கும்
குடிகா ரர்களின் கூடாரம்
குட்டிச்சுவர் ஆகிவிட்ட நாட்டினைச் சீர்படுத்த
கொள்கைவழி நடக்கல இங்குயாரும் –நாட்டைக்
கூறு போடுதுங்க அரிதாரம்!
(அன்றாடம்)
கையில காசுமில்ல வாயில தோசையில்ல
காஞ்சிக் கருகுவது ஏழைகளே
வெளிநாட்டு வங்கிகளில் கோடிகோடி யாப்பணத்தை
வச்சிருக்கும் அரசியல் வாதிகளாலே –வறுமை
வந்ததுங்க நாட்டிலே அதனாலே…
(அன்றாடம்)