புதிய வரவுகள் »

செவ்வாய், 27 நவம்பர், 2012

புலிவலம்! 33


கணவனைப் பின்தொடரும்
மனைவிபோல்
தோட்டாவைப் பின்தொடர்கிறது
உயிர்

இரத்த ஈரத்தில்
முளைகட்டுகின்றன
கனவுகள்

சனி, 24 நவம்பர், 2012

கண்ணீர் மொழி!அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தைதெற் காண்டார் யாம்வடக் காண்டோம்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்
வென்றெறி ஈரிலைக் கொடியார்
எம்மாட்சி கொண்டார்யாம் சிறையிலும் உளோமே!