புதிய வரவுகள் »

செவ்வாய், 22 ஜூன், 2010

அழிப்பது தமிழினை ஆம்!பழுத்தசெந் தமிழதன் பயனுறு மெழுத்தினைக்
கொழுத்தகீழ் விலங்குகள் குறையெனத் திருத்துதல்
ஒழுக்கமில் செயலென ஓது!

கொழுத்தபின் வளைதனில் குடியிரா உயிரிபோல்
செழித்தசெந் தமிழினால் செழிப்பெலாம் அடைந்தபின்
அழிப்பது தமிழினை ஆம்!

கழுத்தினை அறுப்பதும் கடமையோ? தமிழினால்
கொழுத்தபின் தமிழ்க்கொலை புரிவதோ? பிழைத்தவும்
இழுத்துநா அறுத்திடல் ஏற்பு!

தமிழ்ச்செருக்கன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக